எலுமிச்சையில் அடங்கியுள்ள நன்மைகள்

எலுமிச்சையின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் இது தோல், முடி மற்றும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எலுமிச்சை சாறு புளிப்பாகத் தோன்றினாலும் அது ஒரு அருமருந்தாகும். எலுமிச்சையில் உள்ள சாற்றை பிழிந்து எடுத்தபிறகு அதன் தோலை வீணாக்கிவிடுகிறோம் ஆனால் எலுமிச்சைத்தோலின் பலன்கள் தெரிந்தாலும் ஒருபோதும் அதை வீணாக்கமாட்டீர்கள்.

எலுமிச்சை தோல்களின் நன்மைகள்

வைட்டமின்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் எலுமிச்சை தோல்களில் காணப்படுகின்றன.

இது நம் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். எலுமிச்சம்பழத் தோல்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

சாதாரண அளவுடைய எலுமிச்சம் பழத்தின் தோலில் பொட்டாசியம் 160 மில்லிகிராம் உள்ளது.

எலுமிச்சம் பழத்தின் தோலில் வைட்டமின் சி 129 மில்லிகிராம் உள்ளது.

எலுமிச்சம் பழத்தின் தோலில் 10.6 கிராம் நார்ச்சத்து உள்ளது.

எலுமிச்சைத் தோலில் வைட்டமின் ஏ, தோலில் 50 IU என்ற அளவில் உள்ளது.

புற்றுநோய் எதிர்ப்பு

எலுமிச்சை தோலில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் சருமப் புற்றுநோய்கள் வராமல் தடுக்கும். இதன் தோலிலிருந்து கிடைக்கும் எண்ணெயில் டி-லைமோனீன் (D-Limonene) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இது, பெருங்குடல், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.

எலுமிச்சை தோல்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எலுமிச்சை தோல்களில் காணப்படுகின்றன. இது உடலுக்கு வெளிப்புறமாகவும் உட்புறமாகவும் நன்மை பயக்கும்.

எலுமிச்சைத் தோலில் கால்சியம், மக்னீசியத்துடன் சேர்ந்திருக்கும் பொட்டாசியம், ரத்தக்குழாய்ச் சுவர்களைத் தளர்வாக்கி, ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவும். ரத்த அழுத்தம் சீராக இருந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

எலுமிச்சை தோல்களை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலுமிச்சை தோல்களில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது பற்கள் தொடர்பான பிரச்சனைகளை நீக்கும்.

வாயிலுள்ள துர்நாற்றத்தைப் போக்கும் சிறப்பு பண்பு எலுமிச்சைத் தோலுக்கு உண்டு. அபூர்வமான கனியான எலுமிச்சை உடல் எடையை குறைப்பதற்கு பயன்படும் என்பதைப் போலவே அதன் தோலும் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எலுமிச்சையின் தோலை காயவைத்து பொடி செய்துக் கொண்டு அவ்வப்போது பயன்படுத்தலாம்.

இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும் உடலின் நோய் எதிர்ப்புத்தன்மையும் அதிகரிக்கும்.

Recommended For You

About the Author: webeditor