வட கொரியா, கடலடி ஆளில்லா வானூர்தியைச் சோதித்துப் பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த சோதனைஇம்மாதம் நாலாம் திகதியிலிருந்து நேற்று (7 ஏப்ரல்) வரை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
திடீர்த் தாக்குதல் நடத்த ஏதுவாகக் கடலடி ஆளில்லா வானூர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வட கொரியாவின் KCNA செய்தி நிறுவனம் கூறியது.
அண்மைக் காலமாக, வட கொரியா அதன் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்க, தென் கொரியக் கூட்டு ராணுவப் பயிற்சியை எதிர்த்துப் பியோங்யாங் அவ்வாறு செய்வதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர், வட கொரியா அணுவாயுத ஆற்றல்மிக்க புதிய ஆளில்லா வானூர்தியைச் சோதித்துப் பார்த்தது.