கிரான் சந்திவெளி திகிலிவெட்டை பாதை புனரமைப்பு தொடர்பில் கலந்துரையால்

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி திகிலிவெட்டை கிராமத்துக்குச் செல்லும் பாதை நீண்ட காலமாக சேதமுற்று சீரமைக்கப்படாமல் மக்கள் பயணிப்பதற்கு அசௌகரியமான நிலையில் இருப்பதையிட்டு அதனைச் சீரமைப்பது தொடர்பிலான களவிஜமொன்று இன்றைய தினம் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டது.

மக்களினால் சமூகவளை தளங்களில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக மேற்படி பதையை புனரமைப்பது தொடர்பில் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் இப்பாதயை மக்கள் பாவனைக்கு உகந்த வகையில் சீரமைப்பதற்கான விடயங்களை ஆராய்வதற்காக இன்றைய விஜயம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் உள்ளிட்ட குழுவினரே இக்கள விஜயத்தினை முன்னெடுத்திருந்ததுடன், பாதை ஓட்டுனர் மற்றும் பாதையில் பயணம் செய்யும் பொதுமக்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

மேற்படி சந்திவெளி திகிலிவெட்டை பாதை தொடர்பில் மக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை அறிந்து எமது கட்சியின் புலம்பெயர் உறவுகள் மூலம் இதனை பகுதியளவிலாவது சீரமைத்து மக்களுக்கு நன்மை பயக்கும் விடயத்தினை மேற்கொள்ள இன்றைய தினம் எமது களவிஜமொன்றை மேற்கொண்டிருந்தோம். இதன்போது பாதை ஓட்டுனர் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடி பல விடயங்களை ஆராய்ந்தோம். நாம் இன்று விஜயம் மேற்கொண்டிருந்த போதும் கூட இப்பாதையில் பயணித்த ஒரு பெண் பாதை பழுதடைந்திருந்தமையால் அதில் வீழ்ந்த சம்பவமும் இடம்பெற்றிருந்தது. இவ்வாறு தினமும் மக்கள் ஏதோவொரு வகையில் பாதிப்பினை அடைந்து வருகின்றார்கள்.

எனவே இந்தப் பாதையின் புனரமைப்பு என்பது மிகவும் அத்தியாவசியமாக அமைகின்றது. அந்த வகையில் இப்பாதையின் முழுமையான புனரமைப்பிற்கு சுமார் 1.4 மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்ற நிலையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் ஒரு பகுதியளவான புனரமைப்பிற்கு நிதி வழங்கப்படுவதற்கு உள்ள நிலையில் இதனைப் பூரணமாகப் புனரமைப்பதற்குரிய நிதியினை வழங்குவதற்கு உள்ளூர், புலம்பெயர் உறவுகள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor