மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளரின் போலியான கையெழுத்தைப் பயன்படுத்தி 180 இற்கும் அதிகமான மாணவிகளைப் பெண்கள் பாடசாலையில் இணைத்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் கண்டியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக கல்விப் பணிப்பாளர் அவ்வாறாக எந்த பாடசாலை நிர்வாகங்களிடமும் மாணவர்களை இணைத்துக் கொள்ளும்படி கூறவில்லை என மாகாண கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த மோசடி செயற்பாடு 2018 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறுவதாக மாகாண கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாகாண கல்வி அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒரு தணிக்கை விசாரணையின் போது குறித்த மோசடி செயல் வெளி வந்துள்ளது.