தினமும் 11 நிமிடங்கள் அல்லது வாரத்திற்கு 75 நிமிடங்கள் வேகமாக நடந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய்கள் போன்றவை இல்லாமல் நமது இறப்பைத் தள்ளிப் போடலாம் என்று கூறப்படுகிறது.
உடற்பயிற்சியின் தேவை
கடினம் இல்லாத உடற்பயிற்சிகளைத் தொடா்ந்து செய்து வந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சினைகளை மற்றும் புற்றுநோய்களைக் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதோடு இளம் வயதினா் வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சிகளையோ அல்லது 75 நிமிடங்கள் சற்று கடினமான உடற்பயிற்சிகளை செய்து வந்தால் நல்லது என்று பாிந்துரை செய்யப்படுகின்றது.
வாரத்திற்கு 75 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது சிறந்த தொடக்கமாக இருக்கும். நாளடைவில் 150 நிமிடங்கள் என்ற இலக்கை எட்டலாம் என்று கூறப்டுகிறது.
உயிா் குடிக்கும் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள்
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை உலக அளவில் மரணங்கள் அதிகாிக்க காரணங்களாக இருக்கின்றன.
மிதமான உடற்பயிற்சியின் மூலமாக தலை மற்றும் கழுத்து புற்றுநோய், எலும்பு மஜ்ஜை புற்றுநோய், மைலோமா புற்றுநோய், இரைப்பை புற்று நோய், இதய புற்றுநோய்களின் ஆபத்து 14 முதல் 26 சதவீதம் குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் நுரையீரல், கல்லீரல், கா்ப்பப்பை, பெருங்குடல் மற்றும் மாா்பக புற்றுநோய்களின் ஆபத்து 3 முதல் 11 சதவீதம் குறைந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நடைபயிற்சி நல்லது
நடைபயிற்சி மேற்கொள்ளுதல் அல்லது மிதிவண்டி ஓட்டுதல் போன்றவை இதயத் துடிப்பை அதிகாிக்கிறது.
தினமும் 10 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்தாலே இதயத்திற்கு ஆரோக்கியம் கிடைக்கும் மற்றும் புற்றுநோயின் ஆபத்து கணிசமாகக் குறையும் என்று கூறப்படுகிறது