அமெரிக்காவில் கொலைகளமாக மாறிய பாடசாலைகள்.

டென்னசி நாஸ்வில்லியின் கொன்வென்ட் பாடசாலையில் கல்விபயிலும் 200 மாணவர்களும்(தனியார் கிறிஸ்தவ ஆரம்ப பாடசாலை) ஒவ்வொரு நாளும் தங்கள் கற்றல் நடவடிக்கைகளை தேவாலயத்தில் ஆரம்பிப்பதுடன் வாரத்திற்கு இரண்டு தடவை பைபிள்வாசிப்பார்கள்.

இந்த பாடசாலையின் அழகே அதன் எளிமை மற்றும் அப்பாவித்தனத்தில் உள்ளது என பாடசாலையில் இணையத்தளத்தின் ஆரம்பவரிகள் தெரிவிக்கின்றன.

மாணவர்கள் குழந்தைகளாக இருப்பதற்கான சுதந்திரம் உள்ளவர்கள் எனவும் இணையத்தளம் தெரிவிக்கின்றது.

திங்கட்கிழமை இந்த பாடசாலை அமெரிக்காவில் பாரிய துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற பகுதியாக மாறியது.

இந்த பாடசாலையின் முன்னாள் மாணவர்( 28) துப்பாக்கியால் தாக்குதலை மேற்கொண்டார்.

இதன் போது மூன்று மாணவர்கள் உட்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர் பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் 9 வயது.இந்த பயங்கரமான சம்பவம் பாடசாலையில் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ள விடயத்திற்கு எதிர்மாறானதாக அமைந்துள்ளது.

இந்த துப்பாக்கி சூடு இடம்பெறுவதற்கு ஒருநாள் முன்னர் பாடசாலையின் உதவி தலைவருக்கு குழந்தை பிறக்கவுள்ளதை பாடசாலையின் ஆசிரியர்கள் ஊழியர்கள் பரிசுகளை வழங்கி கொண்டாடினார்கள்.

நான்காம் வகுப்பிற்கும் ஒரு ஆசிரியர் தேவை மேலும் உதவியாளர் ஒருவர் தேவை என்ற விளம்பரத்தையும் பாடசாலை வெளியிட்டிருந்தது.

பாடசாலையின் முதலாவது கோல்பருவ காலப்பகுதியில் மாணவர்கள் விளையாடுவதை காண்பிக்கும் படமும் வெளியாகியிருந்தது.

பாராட்டுகள் குவிந்தன.மெகன் ஹில் என்பவர் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் வேதனை குறித்து குறிப்பிட்டுள்ளார்.கொல்லப்பட்ட ஒருவரின் உறவினர் அவர்.

எனது தந்தை உட்பட உறவினர்கள் பணியாற்றும் பாடசாலையில் துப்பாக்கி சூடு தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள் துப்பாக்கி சம்பவம் இடம்பெற்றவுடன் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆறு மணித்தியாலங்களிற்கு பின்னர் அவர் மேலும் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

நான் அதிர்ச்சியிலும் நடந்ததை நம்ப முடியாத நிலையிலும் உள்ளேன் எனஅவர் தெரிவித்தார்.

எனது இதயம் உடைந்துநொருங்கிவிட்டது மிகவும் பெறுமதியான குழந்தைகள் உள்ள பாடசாலையில் ஏன் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளவேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்த துப்பாக்கி சூட்டில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த பாடசாலை பிரிஸ்பைடிரியன் தேவாலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது இது சுவிசே இயக்கத்தின் ஒரு பகுதியாகும் இங்கு கலை அறிவியல் இசை ஆகியவற்றில் வகுப்புகள் வழங்கப்படுகின்றன.

பாடசாலையின் நோக்கம் நம்பகதன்மை குறிக்கோள் ஆர்வம் என்பதாகும்.அதன் இணையத்தளம் அவ்வாறு தெரிவிக்கின்றது.

அந்த பாடசாலையின் இணையத்தளம் முழுவதும் பாடும் ஆடும் நடனமாடும் குழந்தைளின் படங்கள் வீடியோக்கள் காணப்படுகின்றன.அதன் கவனம், “இதயங்களை மேய்த்தல், மனதை மேம்படுத்துதல் மற்றும் குழந்தைப் பருவத்தைக் கொண்டாடுதல்” என்று இணையதளம் கூறுகிறது.

Recommended For You

About the Author: admin