நேற்றிரவுடன் மாநகரசபைகளின் குப்பைகள் அகற்றும் தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு முடிவடைவதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் இன்று காலை பரிசில் குப்பைகளை அகற்றிய வாகனங்கள் அதன் குப்பைகளை எரிக்கும் முக்கிய தளமான Issy les moulineaux எரிப்பகத்திற்குச் சென்றவேளை இந்த எரிப்பகம் தொழிற்சங்கங்களினால் முடக்கப்பட்டுள்ளது.
குப்பை ஏற்றிவந்த மாநகரசபை பாரஊர்திகள் உள்ளே செல்ல முடியாதவாறு எரிப்பக வாயில் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. 30 நிமிடத்திற்கு ஒரு வாகனம் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதால் நீண்ட வரிசையில் குப்பை அகற்றும் பாரஊர்திகள் நிற்பதனால் பெரும் போக்குவரத்து முடக்கமும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் போதிய குப்பைகள் எரிக்கப்படாமையினால் எரிப்பகம் அணையும் நிலை ஏற்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பரிசில் குப்பைகள் தேங்கும் அபாயம் உள்ளது.