உள்துறை அமைச்சர் Gérald Darmanin மருமகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் ஜொந்தாம் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்சின் தென்மேற்கு நகரமான Périgueux இல் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள பல்பொருள் அங்காடியில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரியும் நிலையில், ஜொந்தாம் அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு சில ரகசிய தகவல்களை கோரியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. காவல்துறையினரால் மட்டுமே அனுகக்கூடிய அவர்களது தளத்தை அனுக அவர் கோரிக்கை வைத்ததாக அறிய முடிகிறது.
பின்னர் குறித்த இளம் பெண்ணும், குறித்த ஜொந்தாம் அதிகாரியும் கைது செய்யப்பட்டனர்.
கைதான் பெண், உள்துறை அமைச்சர் Gérald Darmanin இன் தங்கையின் மகள் என அறிய முடிகிறது.
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.