யாழின் முக்கிய வீதி ஒன்றில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

யாழ்ப்பாணத்தில் காலை வேளையில் பெருமளவு மக்களும் மாணவர்களும் பயணிக்கும் முக்கியமான மருதனார்மடம் உடுவில் வீதியில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அப்பகுதி பெரும் அவதிப்படுகின்றது.

மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக வாகனங்கள் நிறுத்த தடை என வலிகாமம் தெற்கு பிரதேச சபையினரால் அறிவித்தல் பலகை போடப்பட்ட இடத்தில் மணல் டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

ஆரம்பித்தில் வீதியின் ஒருபக்கத்தில் மட்டும் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தற்போது இருபக்கமும் நிறத்தப்படுகிறது.

இதனால் உடுவில் மகளிர் கல்லூரி, இராமநாதன் மகளிர் கல்லூரி, பல்கலைக்கழக நுண்கலை துறை, இணுவில் இந்துக் கல்லூரி செல்லும் மாணவர்களும் மருதனார்மடம் சந்தை வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் அண்மைக்காலத்தில் விபத்துக்கள் பல இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, இங்கு தரித்து நிற்கும் மணல் டிப்பர்கள் மாணவர்கள் பாடசாலை செல்லும் நெரிசல் நிறைந்த நேரத்தில் வீதியில் பயணம் செய்வதால் மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த ஆபத்துடன் பயணிக்கவேண்டியுள்ளது.

அறிவித்தல் பலகையினை மட்டும் நாட்டி விட்டு பிரதேச சபை மௌனம் காப்பது ஏன் என அங்கிருந்த சிலர் கேள்வி எழுப்பினர்.

Recommended For You

About the Author: webeditor