அம்பாறையில் இடம் பெற்ற விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறை – காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு சண்முக வித்தியாலயத்திற்கு முன்னால் ஓட்டோவும் உழவு இயந்திரமும் மோதியதில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (03-03-2023) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவம் அறுவடை செய்த நெல்லை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன் ஆட்டோ ஒன்று மோதியதில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் ஓட்டோவில் பிரயாணம் செய்த மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசiலை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு – ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த 66 வயதான மீராமுகைதீன் பாத்தும்மா என்ற பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் அக்கரைப்பற்று மகளின் வீட்டிற்குச் செல்லும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor