அத்தியாவசிய பொருட்களின் விலை குறித்து அமைச்சர் ஒருவர் வெளியிட்டுள்ள செய்தி

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) ஒத்துழைப்பு கிடைத்தவுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்களை குறைக்க அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை , நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நிதி நிலைமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு குறித்து கேள்வியெழுப்பிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியா,சீனா மற்றும் ஜப்பான் ஒத்துழைப்பு
நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சவார்த்தைகள் சாதகமாக உள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அதோடு இந்தியா,சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பை முழுமையாக வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையுமே தவிர குறைவடையாது என சுட்டிக்காட்டிய அமைச்சர் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதால் அரச கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor