சீன இரட்டை பயன்பாட்டு உளவுக் கப்பல் யுவான் வாங் 5 சில மணி நேரங்களுக்கு முன்பு கிழக்கு சீனக் கடலில் இருந்து இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்ததை சர்வதேச கப்பல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2014ஆம் ஆண்டு, இந்தியாவுக்குத் தெரிவிக்காமல் சீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை கொழும்புத் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதித்த மஹிந்த ராஜபக்ச, 2014ஆம் ஆண்டு இறுதியில் வீட்டுக்குச் சென்றார்.
அதன்பின்னர் 2017ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனர்களிடம் ஒப்படைத்த ரணிலும் வீட்டுக்குப் போனார்.
அதேவேளை இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சீன உளவுக் கப்பலான யுவான் வாங் 5 இலங்கை நோக்கி வந்து கொண்டிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.