சீனா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்

குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் பணம் செலுத்த முடியாததால் சீனா தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கோரியுள்ளார்.

இந்தியாவில் இடம்பெறும் வட்டமேசை கூட்டத்தில் பாரம்பரிய கடன் வழங்குபவர்களையும், சீனா, சவுதி அரேபியா, இந்தியா போன்ற புதிய கடன் வழங்குநர்களையும், அதே போன்று தனியார் துறையினரையும் பங்கேற்க வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சீனாவின் நிதியமைச்சர், மற்றும் அந்த நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் இந்தியாவில் இடம்பெறவுள்ள கடன் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் பெப்ரவரி பிற்பகுதியில் ஏனைய கடன் வழங்குநர்கள் மற்றும் சில கடன் வாங்கும் நாடுகளுடன் இந்த வட்டமேசை கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்திலேயே சீனாவின் நிதியமைச்சரும், மத்திய வங்கியின் ஆளுநரும் பங்கேற்கவுள்ளனர் என்று சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா ரோய்ட்டரிடம் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin