பொலிசாரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல் ஒன்றை விடுவிக்குமாறு கோரி இன்று திங்கட்கிழமை காத்தான்குடியில் கடையடைப்பு ஹர்த்தால் இடம் பெறுகிறது.
வர்த்தக ஸ்தாபனங்கள் பொதுச் சந்தைகள் என்பன மூடப்பட்டுள்ளன.
காத்தான்குடி பொது மக்களால் சிறுகச் சிறுக பணம் சேகரிக்கப்பட்டு பொதுமக்களாலேயே கட்டப்பட்டு இலங்கை கலாச்சாரத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு பல வருட காலமாக இறைவனுக்காக சுஜுது செய்யப்பட்ட புதிய காத்தான்குடியின் மத்தியில் கப்பல் ஆலிம் வீதியில் காணப்படும் ஜூம்ஆ பள்ளிவாயல் ஒன்றினை சட்டத்துக்கு முரணாக (வக்புச் சொத்தொன்றினை) இலங்கை பொலீஸ் திணைக்களம் அத்துமீறி பொலீசாரின் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிராந்திய காரியாலயமாக அந்தப் பள்ளிவாயிலை மாற்றும் அராஜக நடவடிக்கைக்கு எதிராக வீட்டுக்குள் முடங்கி இன்று திங்கட்கிழமை ஒரு அறவழிப் போராட்ட தினமாக பிரகடனம் காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்டது
பொதுமக்கள் நோன்பு நோற்று தாங்கள் வீடுகளில் இருந்து இந்த அராஜக நடவடிக்கைக்கு எதிராக எல்லாம் வல்ல இறைவனிடம் கையேந்தும் ஒரு நாளாகவும் இலங்கை வரலாற்றில் இது ஒரு கரி நாளாகவும் இந்த அத்துமீறலை இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துக்காட்டும் ஒரு நாளாகவும் மாற்றிக் காட்டுவோம்.
இறைவனுக்கு சுஜுது செய்த பள்ளிவாயிலை அடாவடித்தனமாக கையகப்படுத்தி அதில் குளிர்காய நினைக்கும் அரசின் அசமந்த போக்கை கண்டித்து எதிர்ப்புத் தெரிவிப்போம் என காத்தான்குடி பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவிப்பு