யாழில் விழித்தெழு வீதி நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டது

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கூத்தாட்டு அவைக்குழாத்தினரது ‘ விழித்தெழு ‘ என்னும் பெயரில் அமைந்த வீதி நாடகம் இன்று (01 – 02- 2023) யாழ்ப்பாணம் இந்திய கலாசார மத்திய நிலையத்தில் ஆற்றுகை செய்யப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த நாடக ஆற்றுகை ஏற்பாடு செய்யப்பட்டது.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் இன்று மாலை நடைபெற்ற ‘ விழித்தெழு ‘ வீதி நாடக ஆற்றுகையில் யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரி ராம் மகேஷ் உள்ளிட்ட இந்தியத் தூதரக அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

10 கலைஞர்கள் பங்கு கொண்ட இந்நாடக ஆற்றுகையானது போதைப்பொருள்களிலிருந்து எவ்வாறு மாணவர்கள் மற்றும் இளைய சமூகம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதனை மையப் பொருளாகக் கொண்டு யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் நாடகவியலாளர் விஜயரூபன் அவர்களது நெறியாள்கையில் தயாரிக்கப்பட்டு மாணவர்களை இலக்குப் பார்வையாளர்களாகக் கொண்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor