உலக அழிவை காட்டும் கடிகாரம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

உலக அழிவிற்கான அபாயத்தை காட்டும் டூம்ஸ்டே கடிகாரத்தில் 12 மணியை என்ற நேரத்தை தொட இன்னும் 90 வினாடிகளே மீதம் உள்ளதாக தெரிவந்துள்ளது.

கடந்த 1947ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பாதுகாப்பு சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் ‘டூம்ஸ்டே கடிகாரம்’ உருவாக்கப்பட்டது.

உலகில் நடக்கும் பருவநிலை மாற்றம், போர், அணுஆயுத ஆபத்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை வைத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை விஞ்ஞானிகள் மாற்றி அமைக்கின்றனர்.

உலக அழிவு தொடர்பான நம்பிக்கை

அதன்படி நள்ளிரவு 12 மணியை இந்த கடிகாரம் தொட்டுவிட்டால் இந்த உலகம் அழிந்துவிடும் என்பது நம்பிக்கை.

உலக அழிவிற்கான அபாயம் இருக்கும் சமயத்தில் இந்த கடிகாரத்தின் முள்ளானது 12 மணிக்கு அருகில் செல்லும்.

இதற்கு முன்னர் கடந்த 2016ம் ஆண்டு இந்த கடிகாரத்தில் 12 மணியாகுவதற்கு 3 நிமிடம் இருந்த போது ரஷ்யா – உக்ரைன் போர், பருவநிலை நெருக்கடி, கோவிட் பரவல் உள்ளிட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறையும் நிமிடங்கள்

இந்த நிலையில் தற்போது குறித்த கடிகாரத்தில் 12 மணிக்கு இன்னும் 90 வினாடிகளே மீதம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கடிகாரத்தின் நிமிடங்கள் குறைந்து கொண்டே வருவது இந்த உலகிற்கு நல்லது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நாடுகளும் இதை உணர்ந்து மனித குலத்தின் நலனுக்காகவும் சுற்றுச்சூழல் நலனுக்காகவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor