சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி விரைவில் கிடைக்கப் பெறும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் ஏற்றுக்கொள்ளக் கூடிய உத்தரவாதங்களின் அடிப்படையில் அந்த அமைப்பின் கடனுதவி அடுத்த மாதம் அல்லது முதல் காலாண்டுக்குள் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா, ஜப்பான், பாரிஸ் அமைப்பு போன்றன சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கை தொடர்பில் உத்தரவாதம் அளிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான கடனுதவி
நிதி இயலுமை குறித்த உத்தரவாதம் கிடைக்கப் பெற்று நான்கு வாரங்களில் இலங்கைக்கு கடனுதவி கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.