சீனாவில் விற்பனை செய்யப்படும் கோவிட் மருந்துகள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பரவல் உச்சம் பெற்று வருகிறது. உயிரிழப்பு, சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீனா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கோவிட் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சீனாவில் இந்திய மருந்துப்பொருட்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது
இந்நிலையில், சீனாவில் இந்திய மருந்துப்பொருட்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட் தடுப்பு மருந்துகளான பிரிமொவிர், பக்சிஸ்டா, மல்னுநெட், மல்நட்ரிஸ் ஆகிய 4 மருந்துகளின் தேவை சீனாவில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த 4 மருந்துகளும் கோவிட்டிற்க்கான அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இந்திய அரசு அனுமதியளித்துள்ளது.

ஆனால், இந்த மருத்துகளை பயன்படுத்த சீனா அனுமதிக்கவில்லை. ஆனாலும், இணையவழி விற்பனை தளம் மூலம் இந்திய மருந்துப்பொருட்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இணையவழியாக போலி மருந்து விற்பனை
பெய்ஜிங் மெமோரியல் பார்மாசூட்டிகல் (Beijing Memorial Pharmaceutical) நிறுவனத்தின் தலைவரான ஹீ சியாபிங் இதுதொடர்பில் தெரிவிக்கையில் “நம்பகமான மற்றும் மலிவு விலையில் கோவிட் மருந்துகளை உத்தரவாதமான சிகிச்சை விளைவுகளுடன் நாங்கள் பெறக்கூடிய ஒரே நாடு இந்தியா.

ஆனால் போலி மருந்துகளை உற்பத்தி செய்யும் சட்டவிரோத குழுக்களால் தற்போது இவை இணையவழியாக முன்னெடுக்கப்படுவதாகவும் இது நோயாளிகளின் சிகிச்சையை மோசமாக பாதிக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா தனது குடிமக்களுக்கான செலவைக் குறைக்கவும், இரு நாடுகளுக்கு இடையிலான பாரிய வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும் தனது மருந்துப் பொருட்களை அனுமதிக்குமாறு சீனாவை வற்புறுத்தி வருகிறது.

Recommended For You

About the Author: webeditor