கனடாவில் வேலையற்றோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் கனடாவில் 104000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக கனடாவின் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை 5.0 வீதமாக குறைவடைந்துள்ளது.

கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

நான்கு மாத காலப் பகுதியில் மூன்று தடவைகள் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

முழு நேர வேலை வாய்ப்புக்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளியலாளர்கள் எதிர்வுகூறியதனை விடவும் வேலையற்றோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் கட்டுமானத்துறையில் அதிகளவு வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்துறையை விடவும் தனியார் துறையில் அதிகளவில் வேலை வாய்ப்புக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இள வயதினர் மத்தியில் அதிகளவு புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor