18 வயது முதல் 26 வயதுடையவர்களுக்கு இலவசமாக ஆணுறை வழங்கும் பிரன்ஸ்

பிரான்ஸில் 18 வயது முதல் 26 வயதுடையவர்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கும் திட்டத்தை அந்த நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பால்வினை நோய்களை பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை பிரான்சு அரசு மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸ் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் ஒலிவியர் வேரன் தனது ட்விட் பதிவில்,

“மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி கருத்தடை சாதனங்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை பிரான்சு கொண்டு வந்து இருக்கிறது என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,

‘கடந்த ஆண்டு முதலே 25 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு இலவசமாக கருத்தடை சாதனங்கள் வழங்கப்படுகின்றன’ என்றார்.

மேலும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி கருத்தடை சாதனைங்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை பிரான்சு கொண்டு வந்து இருக்கிறது.

கடந்த ஆண்டு முதலே 25 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு இலவசமாக கருத்தடை சாதனங்கள் வழங்கப்படுகின்றன.

இருப்பினும், புதிய திட்டம் 18 வயதுக்கு உள்பட்ட இளம் பெண்களுக்கும் வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது என்றார். பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) கடந்த டிசம்பர் மாத துவக்கத்திலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நிலையில், புத்தாண்டு முதல் பிரான்ஸில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

தற்போது 18- 25 வயது வரையிலான இளம் வயதினருக்கு இந்த சுகாதார திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் விரைவில் மைனர்களுக்கு இது விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பால்வினை நோய்களின் எண்ணிக்கை 30 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: webeditor