2022 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமான உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
உதவிகள்
புதிய உதவி அடிப்படையில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.அத்துடன் பாடசாலை மதிய உணவுகளுக்கான நிதி, சிறு விவசாயிகளுக்கு உரம் மற்றும் புதிய மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பண உதவி உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்கிறது என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கான கடன்கள், பயிற்சிகள் மற்றும் உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.
நெருக்கடியான காலங்களில் அவர்கள் அதிக சுமையை எதிர்கொள்வதன் காரணமாகவே அந்த உதவி வழங்கப்பட்டது என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.