மட்டக்களப்பு நகரில் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றான புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சஸ்டி விரத்தத்தை சிறப்பிக்கும் முகமாக ஆலய வரலாற்றில் முதன் முறையாக ஆனைமுகப் பெருமான் கஜமுகா சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்வு மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
விநாயகர் சஸ்டி விரதமானது வெகு சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டு 19வது நாளான இன்று விசேட பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு இச் சூரசம்கார நிகழ்வு இடம்பெற்றது.
ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ பிவிசாந் சிவாச்சாரியாரினால் ஆலய மூலப் பெருமாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் வசந்த மண்டபத்தில் விசேட பூசை இடம்பெற்று கஜமுக சூரசம்கார நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு வெளி வீதியுலாவில் கஜமுக சூரன் வதம் செய்யப்பட்டு எலி வடிவெடுத்து விநாயகப் பெருமானின் வாகனமாக மாறும் காட்சி சிறப்பான முறையில் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
தலைவர் எஸ்.மங்களராஜன் அவர்களின் வழிகாட்டலிலான ஆலய பரிபாலன சபையின் அயராத முயற்சியின் காரணமாகவும் நலன்விரும்பிகளான செல்வரெட்ணம் யோகரெட்ணம் அவர்களின் நிதிப் பங்களிப்பில் சிம்மாசனமும், அமரர் சபாரெத்தினம் சிவக்கொழுந்து ஞாபகர்த்தமாக திருமதி.சூரியமலர் அவர்களின் நிதிப்பங்களிப்பில் பூத வாகனமும் அன்பளிப்புச் செய்யப்பட்டு இச் சூரன்போர் வைபவம் வெகு சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும், ஆலய வரலாற்றில் முதன் முறையாகவும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://we.tl/t-bx1Jfld9PY?src=dnl