தலை முடி உதிர்வுக்கு புரதச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம், பயோட்டின் குறைபாடுகள், மனக்கவலைகள், தூக்கமின்மை, உடல் சூடு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, பொடுகு போன்றவை முக்கிய காரணமாக உள்ளன. இதற்காக பயன்படுத்த வேண்டிய சித்த மருந்துகள்:
1) அயச் சம்பீர கற்பம் 200 மி.கி. அல்லது அய பிருங்க ராஜ கற்பம் 200 மி.கி. எடுத்துக்கொண்டு இவற்றுடன் கரிசாலை சூரணம் ஒரு கிராம் வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.
2) தலைக்கு செம்பருத்தி பூ தைலம் அல்லது கரிசாலை தைலம் தேய்த்து குளித்து வர வேண்டும்.
3) வாரம் ஒரு முறை கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வெண் மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து இவைகளை சம அளவில் எடுத்து பொடித்து பாலில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர வேண்டும். இதனால் பொடுகு, உடல் சூடு நீங்கும், உடல் குளிர்ச்சி அடையும், கண் ஒளி கூடும்.
உணவில் முட்டை, பால், கருவேப்பிலை கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பச்சைப் பட்டாணி, முருங்கை கீரை, வேர்க் கடலை, பேரீச்சம் பழம், மாதுளம்பழம் இவைகளை சேர்த்துக்கொள்வது நல்லது.