வடமாகாண விவசாய நவீன மயமாக்கல் செயல்திட்டப் பணிப்பாளரின்
தலைமையில் மாகாண விவசாய திணைக்களம், யாழ். மாவட்ட நவீன
விவசாய உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கம் இணைந்து சுமார் 190
விவசாயிகளுக்கு யாழ்.மாவட்டத்தில் நவீன முறையில் உருளைக் கிழங்கு
உற்பத்தியினை மேற்கொள்வதற்கு உள்ளீடுகள், உபகரணங்களான
(உருளைக்கிழங்கு, நீர்ப்பாசனத் தொகுதி, பொலித்தீன் சீற்றுக்கள், விவசாயிகளின்
தேவைக்காக நவீன உருளைக் கிழங்கு உற்பத்தி சங்கத்திற்கு பெட்டியுடன்
கூடிய இரண்டு உழவு இயந்திரங்கள் என சுமார் 190 மில்லியன் ரூபாய்
பெறுமதியான பொருட்கள் (28.11.2022) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர்
எஸ். எம். சமன் பந்துலசேனா கலந்து சிறப்பித்துள்ளார்.
அத்துடன் சிறப்பு விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர்
எ.சிவபாலசுந்தரம், வடமாகாண விவசாய நவீன மயமாக்கல் செயல்திட்ட
பணிப்பாளர் வி.விஜிதன், மாகாண விவசாய பிரதிப் பணிப்பாளர் திருமதி
அஞ்சனா ஸ்ரீரங்கன், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி எஸ்.
கைலீஸ்வரன் மற்றும் CSIAP திட்டத்தின் பிரதிப்பணிப்பாளர் அருளப்பு ஜேஐ’
சந்திரபாபு, மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய
போதனாசிரியர்கள், ISP நிறுவன உத்தியோகஸ்தர்கள் செயல்திட்ட
உத்தியோகத்தர்கள், கிரம உத்தியோகஸ்தர் என பலரும் கலந்து
விவசாயிகளுக்கான இவ் உள்ளீடுகளை வழங்கி வைத்துள்ளனர்.