யாழ் காரைநகர் ஈழத்து சிதம்பர ஆலயத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ள நீதிமன்றம்!

யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகர் ஈழத்து சிதம்பர பாலஸ்தாபன முயற்சிக்கு நீதிமன்று தடை உத்தரவு, வழங்கியுள்ளதாக சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்தார்.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவிலின் உடைய திருவம்பாவை உற்சவத்தினை குழப்பும் விதமாக அதனுடைய தர்மகத்தாக்களில் ஒருவர் எதிர்வரும் நாலாம் திகதி பாலஸ்தாபனத்தை செய்யப்போவதாக அறிவித்ததால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஒன்று உருவாகியது.

திருவெம்பா உபயகாரர்களும் ஆலயத்தினுடைய பக்தர்களும் திருவம்பாவை உற்சவம் நடைபெறாமல் பாலஸ்தாபனம் செய்வது தமது ஊருக்கு உகந்ததல்ல என்ற ரீதியிலே அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை அதனாலே ஒரு குழப்பமான சூழ்நிலை இருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த பாலஸ்தாபன நிகழ்வை எதிர்வரும் நாலாம் திகதி செய்யக்கூடாது என தடை உத்தர ஒன்றிணை கோரி திருவெம்பாவை உபயத்தை மேற்கொள்கின்ற ஐந்து திருவிழா உபயகாரர்கள் அவர்கள் ஆலயத்தினை வழிபடுவர்களாகவும் இருக்கின்றார்கள்.

அவர்கள் மூலம் ஒரு வழக்கு இன்றைய தினம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கிலே எதிர்வரும் நான்காம் திகதி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த பாலஸ்தாபன நிகழ்வை தடை செய்வதாக ஊர்காவற்துறை மாவட்ட நீதிமன்றத்தினால் இன்றைய தினம் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையிலே எதிர்வரும் நான்காம் திகதி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த பாலஸ்தாபன நிகழ்வானது நீதிமன்ற கட்டளை மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்றது இந்த வழக்கிலே வழக்காளிகளான உபயகாரர்கள் சார்பில் நான் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தேன்.

நீதிமன்றத்திலே வழங்கப்பட்ட கட்டளை தொடர்பில் எதிராளிகளுக்கு கட்டளை அனுப்பப்படவுள்ளது. அத்தோடு இந்த வழக்கு எதிர்வரும் 12ஆம் திகதி வரை திகதியிடப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor