தந்தை குறித்து நளினி மகள் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் இரு தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை தொடர்ந்து சந்தித்து வரும் நளினி மத்திய அரசு, மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரித்தானியாவில் இருக்கும் நளினியின் மகள் ஹரித்ரா லண்டனுக்கு அப்பாவை சீக்கிரம் அனுப்புங்க அம்மா என உருக்கமான கோரிக்கைiய விடுத்துள்ளார்.

இது குறித்து நளினி மேலும் தெரிவித்துள்ளதாவது,

நான் இந்தியன், வாடகை வீட்டில் வசிக்கிறேன், என் கணவர் முருகனை எங்களுடன் அனுப்பும்படி கேட்டோம், ஆனால் அவரை முகாமில் வைத்துள்ளனர். முருகனுக்கு பாஸ்போர்ட், விசா எடுப்பது தொடர்பாக இலங்கை பாஸ்போர்ட் அலுவலகம் செல்ல வேண்டும்.

எங்கள் மகள் ஹரித்ரா, தன்னுடைய தந்தை முருகனை சந்திக்க மிகவும் ஆர்வமாக உள்ளார், அப்பாவை சீக்கிரம் அனுப்புமா என என்னிடம் சொன்னாள்.

எங்கள் மகள் இப்போதைக்கு இங்கு வர மாட்டாள். நாங்கள் இருவரும் தான் அவசர விசா, பாஸ்போர்ட் கிடைத்தால் ஹரித்ராவை போய் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor