மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப பிரச்சினைகளால் மன அமைதி குறையும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் அனுகூலம் உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். ரிஷபம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன்... Read more »
மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கும் என்று நம்பப்படும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உயிர் உருவாவதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சிறிய மூலக்கூறுகளை அடையாளம் கண்டதாகக் கூறும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக குழு, அதற்கு K2-18b என்று பெயரிட்டுள்ளது. இந்த கிரகம் சமீபத்தில் நிறுவப்பட்ட ஜேம்ஸ்... Read more »
அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2024/2025 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வழிகாட்டல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்தக் கையேடுகள் நாடெங்கிலுமுள்ள பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.... Read more »
அமெரிக்காவும் உக்ரைனும் ஒரு பெரிய கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உக்ரைனின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசெட் மற்றும் உக்ரைன்... Read more »
ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறித்த திகதிகளில் ஏனைய சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும்... Read more »
இலங்கையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்து வந்த தங்கத்தின் விலை தற்போது குறைவடைந்து வருகின்றது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 262,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம்... Read more »
யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்து இராணுவம் கைப்பற்றிய பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. பத்தரமுல்லையில் உள்ள இராணுவத்தினர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. கையளிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நீதிமன்ற உத்தரவிற்கமைய... Read more »
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையால் அங்கீகரிக்கப்பட்ட உரிமங்களைக் கொண்ட மதுபான விற்பனை நிலையங்களைத் தவிர, அனைத்து சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் எதிர்வரும் ஆறாம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக மதுபானக் கடைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »
பாகிஸ்தான் வான் வெளியை ஒரு வருடத்திற்கு மூடப்பட்டால், நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 5,081 கோடி இந்திய ரூபா) இழப்பை சந்திக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. கடந்த வாரம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், அண்டை... Read more »
மட்டக்களப்பு – வவுணதீவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயக் காணியை காவல் காப்பதற்காக சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. வவுணதீவு – நாவற்காடு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே யானை தாக்குலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.... Read more »

