புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றிய தங்கம் மற்றும் வெள்ளி, பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்து இராணுவம் கைப்பற்றிய பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

பத்தரமுல்லையில் உள்ள இராணுவத்தினர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கையளிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நீதிமன்ற உத்தரவிற்கமைய தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சபையால் அதன் பெறுமதி மதிப்பிடப்பட்டதன் பின்னர் இலங்கை மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.

தங்க ஆபரணங்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டால் அவற்றை பொதுமக்களிடம் ஒப்படைக்க தயார் எனவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin