மனிதர்கள் வாழ ஏற்ற மற்றொரு கிரகம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் வாழ ஏற்றதாக இருக்கும் என்று நம்பப்படும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உயிர் உருவாவதற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சிறிய மூலக்கூறுகளை அடையாளம் கண்டதாகக் கூறும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக குழு, அதற்கு K2-18b என்று பெயரிட்டுள்ளது.

இந்த கிரகம் சமீபத்தில் நிறுவப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் (James Webb Space Telescope) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியை விட இரண்டரை மடங்கு பெரிய K2-18b, 700 டிரில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது.

கடல் பைட்டோபிளாங்க்டன் மற்றும் பக்றீரியாக்களின் சுவாசத்தால் உற்பத்தி செய்யப்படும் வாயுக்கள், தெளிந்த நீருக்கான மூலக்கூறுகள் கோளைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் இருப்பதால், இது ஒரு நேர்மறையான அறிகுறி என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin