யாழில் கோர விபத்து

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இண்டு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்துச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளே வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கருகாமையிலுள்ள மதிலுடன் மோதியதே விபத்துக்கு காரணமாகும். Read more »

கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு இன்று (28) பிற்பகல் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந்து, மடிக்கணினி ஒன்றை கொடுத்து விட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, விசேட அதிரடிப்படை, விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கும்... Read more »
Ad Widget

அதிகரிக்கும் மின் கட்டணம்?

இலங்கையில் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நான்காவது கடன் தவணையை நாட்டிற்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதன்படி, மின்சார உற்பத்தி செலவைப் பிரதிபலிக்கும் மின்சாரக் கட்டணத்தை சமர்ப்பிக்க... Read more »

தீயில் எரிந்த இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தீயில் எரிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இணுவில் கிழக்கைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (வயது 30) என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை வீட்டில்... Read more »

இலங்கையின் பல பகுதிகளில் அதிகரித்தது வெப்பநிலை

இலங்கையின் பல பகுதிகளில் அதிகரித்தது வெப்பநிலை இன்று (27) பல பகுதிகளில் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும்... Read more »

திருத்தந்தையின் இறுதி ஆராதனைகளுக்கு மத்தியில் ட்ரம்ப் மற்றும் செலன்ஸ்கி இடையே சந்திப்பு

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி ஆராதனைகள் இன்று இடம்பெற்ற நிலையில் அதில் பங்கேற்பதற்காக வத்திக்கான் சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இறுதி ஆராதனைகளுக்கு முன்னர் புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவில் இருவரும் சந்தித்துக்கொண்டதாக சர்வதேச... Read more »

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட முயற்சித்தோம் – கலையரசன் தடுத்துவிட்டதாக ஹக்கீம் குற்றச்சாட்டு

சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைகள் பாரிய பிரச்சினைகளை கொண்டது. அவற்றில் வீரமுனை வட்டாரமும் பிரச்சினைகளை கொண்டது. இந்தப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மாற்று வழியாக நடைபெறும் சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் தமிழரசு கட்சியில் எமது வேட்பாளரை போட்டியிட செய்து அவர்களின் உடன்பாட்டுடன் அந்த வட்டாரத்தை... Read more »

பொது பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் – தயாசிறி வேண்டுகோள்

அண்மைய நாட்களாக இலங்கையில் இடம்பெற்றுவரும் தொடர் கொலைகளில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தனது கடமைகளில் தவறிவிட்டுள்ளார். இதனால் அவர் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய... Read more »

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக ஆனந்த் அம்பானி நியமனம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வாரியக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நியமனம் 2025 மே 1, முதல் அமலுக்கு வரும்... Read more »

ஏப்ரலில் நாட்டிற்கு வருகைத்தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஏப்ரல் மாதத்தில் 150,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்தும்... Read more »