கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு இன்று (28) பிற்பகல் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந்து, மடிக்கணினி ஒன்றை கொடுத்து விட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, விசேட அதிரடிப்படை, விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் கறுவாத்தோட்டம் பொலிஸார் உள்ளிட்ட குழுவை உடனடியாக தூதரகத்திற்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளைத் தொடர்ந்து, கறுவாத்தோட்டம் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin