வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் பதவியில் இருந்து இடைநிறுத்தம்!

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றிய கிராம சேவகர் ஒருவர் தனது கல்விச் சான்றிதழை உறுதிப்படுத்த தவறியமையால் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.   கடந்த 2018 ஆம் ஆண்டு கிராம சேவகராக நியமனம் பெற்ற ஒருவர் தனது மூன்று வருட நிறைவில் பதவியினை... Read more »

தனியார் பேருந்து சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!

“Clean Sri Lanka” வேலைத்திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து சோதனை நடவடிக்கைக்கு எதிராக தனியார் பேருந்து் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக  தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள் எல்லை மீறி பஸ்களை சோதனையிடுவதாகவும், தேவையற்ற முறைகளில் செயற்படுவதாகவும்... Read more »
Ad Widget

குறைந்த செலவில் கொண்டாடப்படவுள்ள, 77வது சுதந்திர தினம்

77வது சுதந்திர தினத்தை குறைந்த செலவில் கொண்டாட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் விழாவில் பங்கேற்கும் அழைக்கப்படும் விருந்தினர்களின் எண்ணிக்கை 3000 இல் இருந்து 1600 ஆக குறைக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டார். இந்த... Read more »

தனிப்பட்ட தகவல்களை போலியான குறுஞ்செய்திகளுக்கு கொடுக்காதீர்கள்! – தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு

வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பெறப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பொது மக்களை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. வறிய குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது... Read more »

ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு அனுப்ப வேண்டாம்… ஜனாதிபதிக்கு ரிஷாட் கடிதம்!

முல்லைத்தீவு கடலில் தத்தளித்து மீட்கப்பட்ட ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் , ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் நேற்று (7) எழுத்துமூல கோரிக்கை விடுத்துள்ளார். மியன்மாரில் யுத்த மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால், நிராயுதபாணியாக வந்த... Read more »

மாணவியின் நிர்வாண காட்சிகளை படம் பிடித்து துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு பொலிசார் ஆதரவா? தொடங்கியது சிறப்பு விசாரணை

பாடசாலை மாணவி ஒருவரின் நிர்வாண காட்சிகளை கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்து , மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த திவுலபிட்டிய ஆசிரியருக்கு கொடுத்துள்ள பொலிஸாரின் விசித்திரமான ஆதரவு குறித்தும் , சார்பு நிலை குறித்தும், அதிபரும் மினுவாங்கொடை பிராந்தியக் கல்விப் பணிப்பாளரும் விசேட விசாரணைகளில்... Read more »

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்கள்!

வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டோல்பன்கள்  உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (7) மீட்கப்பட்டுள்ளது. முள்ளிக்குளம்  தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச் சென்ற வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் அப்பகுதிக்குச்... Read more »

இன்றைய ராசிபலன் 08.01.2025

மேஷம் வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். ரிஷபம் புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். தவறிய... Read more »

டுபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, நடிகர் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளானது.

டுபாயில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, நடிகர் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளானது. தடுப்புச் சுவரில் மோதி சுழன்றடித்து கார் நின்ற நிலையில், அஜித்குமாருக்கு என்ன ஆனதோ என பலரும் பதறினர். ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமுமின்ற அஜித்குமார் உயிர்பிழைத்துள்ளார். இதுபோன்று... Read more »

மேலே பார்த்துவிட்டு வீட்டுக்கு போக பாராளுமன்றம் வரவில்லை அர்ச்சுனா கடும் கோபம்

நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தமக்கு நேரம் ஒதுக்கித் தரப்படவில்லை என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன்; அர்ச்சுனா சபையில் இன்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவரிடம் காணப்படுகின்ற நிலையில் இது தொடர்பில் சபாநாயகரின் அறிவுறுத்தல் கிடைக்கபெற்ற நிலையிலும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை... Read more »