திஹகொட பகுதியில் மத்தியஸ்த சபைக்குச் சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திஹகொட, பெத்தங்கவத்தை விகாரையில் நேற்று (25) பிற்பகல் நடைபெற்ற மத்தியஸ்த சபை அமர்விலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் திஹகொட பகுதியில் வசிக்கும் 73 வயதுடைய... Read more »
மொனராகலை, செவனகல பகுதியில் மின்சாரக் கம்பம் ஒன்று உடைந்து விழுந்ததில் எம்பிலிபிட்டிய அலுவலகத்தில் பணிபுரியும் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானதால் எம்பிலிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கராபிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த... Read more »
இந்த ஆண்டு நெல் கொள்வனவுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். ஹோமாகம, பிடிபன பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, நெல் கொள்முதல் செய்வதற்காக ஒரு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவெனவும் குறிப்பிட்டார். “நெல்... Read more »
தாய்லாந்தில் நடைபெற்ற I am Model Search Kids International – 2025 அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 08 வயதான ஏஞ்சலா விமலசூரிய மகுடத்தை வென்று இன்று (26) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். உலகின் 16 நாடுகளைச் சேர்ந்த 42... Read more »
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2025 வடபகுதி மக்களினால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வர்த்தக திருவிழாவான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025 , இம் மாதம் 24, 25 மற்றும் 26 திகதிகளில் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில் எனும் தொனிப்பொருளுடன் 2002 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது இம்முறை 15 வது ஆண்டாக மிகச்சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் Lanka Exhibition & Conference Services (Pvt) Ltd. நிறுவனம் மற்றும் யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழிற்துறை மன்றம் (CCIY) இணைந்து யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியினை நடாத்தி வருகின்றது. இந்த ஆண்டு 45,000 தொடக்கம் 60,000 வரையான பார்வையாளர்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படும் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பல்வேறுபட்ட வழங்குனர்களால் 350 க்கு மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயம், தொழில்நுட்பம் , விருந்தோம்பல், கல்வி, உணவு , நவநாகரிகம் மற்றும் இதர தொழிற்துறைகள் என பல்வேறுபட்ட வர்த்தக நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட உள்ளன. கைத்தொழில்துறை வளர்ச்சியில் சந்தைவாய்ப்பு தொடர்பில் வடக்கில் இருந்த பாரிய ஒரு இடைவெளியானது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் மூலமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்தை மறுத்துவிட முடியாது . அதுமட்டுமல்லாது வடக்கின் தொழில் முயற்சிகள் அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதற்கான வழிமுறைகளை உருவாக்கியுள்ளதுடன் எமது உற்பத்திகள் இன்று வடக்கில் மாத்திரமன்றி தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளையும் ஆக்கிரமித்து உள்ளது என்றால் இவ்வாய்ப்புகளை உருவாக்கலுக்கான அடித்தளம் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் மூலம் ஏற்படுத்தப்பட்டது என்பது மறுக்கமுடியாதது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்தி மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தவும், வடக்கிலுள்ள சமூகங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள பல்வேறு வகையான உற்பத்திகள் மற்றும் சேவைகளை அறிந்து கொள்வதற்கும் , தெற்கு மற்றும் சர்வதேச தொழில் முயற்சியாளர்கள் வடக்கிலுள்ள சக தொழில் முயற்சியாளர்களைச் சந்தித்து வியாபார பொருளாதார தொழில்நுட்ப ரீதியில் தொடர்புகளை வளர்க்கவும் எமது தொழில் முயற்சியாளர்கள் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அவற்றின் வினைத்திறனான செயல்பாடுகளை அறிந்து பயனடையும் ஒரு களமாகவே யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி அமைந்துள்ளது.... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளநீர் இருப்பிடங்களுக்குள் புகுந்தது – இரணைமடு குளத்தின் சகல வான்கதவுகளும் திறப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் மக்கள் இருப்பிடங்களிற்குள் வெள்ளநீர் உட்புகுந்ததுடன் உள்ளக போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டது. அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன்,... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள இலங்கையின் பிரபல நிதி நிறுவனம் ஒன்றின் கிளையிலிருந்து அடகு வைக்கப்பட்ட பல நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் நான்கு பேர் நேற்று (21) மரதன்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் பெண்கள், மற்ற இருவர் ஆண்கள்,... Read more »
அரசாங்கத்தின் திட்டத்தை பின்பற்றப்படாவிட்டால், அரிசி ஆலை இராணுவத்தால் கையகப்படுத்தப்படும்- ஜனாதிபதி!
அரசாங்கத்தின் திட்டத்தின்படி இயங்காத அரிசி ஆலைகளுக்கு இராணுவம் அனுப்பப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நேற்று (21) இரவு சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சட்டன சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்கத்தின்... Read more »
கொழும்பு, கண்டி ஜனாதிபதி மாளிகைகளை தவிர்ந்து ஏனைய ஜனாதிபதி மாளிகைகள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை பொருத்தமான வேலை திட்டங்களுக்கு பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம். 🔴அடையாளம் காணப்பட்ட சிறைச்சாலைகளின் வெளிப்புற பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்களை ஈடுபடுத்தவும், அவர்களை 03 மாதங்களுக்கு ஒரு முறை... Read more »
6 கோடி 63 இலட்சம் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளை வெளிநாட்டிலுந்து கடத்தி வந்து விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more »

