மாட்டிறைச்சிக்கு தடை

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கும் நுகர்வதற்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் 8 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் தற்போது ஹிமந்தா பிஸ்வா... Read more »

வாடகை செலுத்தும் அரச நிறுவனங்கள், அரச கட்டிடங்களுக்கு

அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டிடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை இயங்கும் அலுவலகத்தின் மாதாந்த வாடகை... Read more »
Ad Widget

சபாநாயகரின் பட்டம் பொய் என்றால் இராஜினாமா செய்ய வேண்டும்

சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகைமை தொடர்பில் உண்மையான தகவல்களை முன்வைத்திருந்தால் அதற்கு அடிபணியுமாறு கோர வேண்டும் என கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். இல்லை என்றால் பதவி நீக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள்... Read more »

நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கு இன்று நள்ளிரவு வரை காலக்கெடு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று(06) நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதுவரை சுமார் 20வீதமான அறிக்கைகள் மாத்திரமே மாவட்ட மட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, பெப்ரல் என்ற சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் நிறைவேற்றுப் பணிப்பாளர்... Read more »

கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஆளுனர் நியமித்தார்.

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் இரத்னசேகர மாற்றம் செய்துள்ளார். மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றிய எம்.வை.பைசால் மாகாண முதலைமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக J.லியாகத் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.... Read more »

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் நியமனம்

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இதற்கமைய ஆளும்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அபு பக்கர் ஆதம்பாவா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியை பிரபதிநிதித்துவப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவரது பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன்... Read more »

மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதன்படி, மின்சார சபை முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதுடன், தற்போதுள்ள மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் அதே முறையில் மாற்றமின்றி பேணுவதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது. Read more »

இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றில் நிறைவேற்றம்

2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் பாராளுமன்றத்தில் இன்று (06) வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. 2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் பணிகள் மற்றும் கடன் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு... Read more »

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றத்திற்கான குழு தலைவரானார் ஜீவன் தொண்டமான்

பொதுத் தேர்தலில் சிலிண்டர் மற்றும் யானை சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குழுவின் தலைவராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆவார். 46,438 அதிகூடிய... Read more »

சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்க அரசாங்கம் தீர்மானம்

சிவப்பு சீனி மீதான பெறுமதி சேர் வரியை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.... Read more »