அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இதற்கமைய ஆளும்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அபு பக்கர் ஆதம்பாவா நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சியை பிரபதிநிதித்துவப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவரது பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சிறுபான்மை கட்சிகள் சார்பாக இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரசியலமைப்பு பேரவைக்கான நியமனம் மாத்திரமே எஞ்சியுள்ளது.