வாடகை செலுத்தும் அரச நிறுவனங்கள், அரச கட்டிடங்களுக்கு

அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டிடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை இயங்கும் அலுவலகத்தின் மாதாந்த வாடகை ஐம்பது இலட்சம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக வர்த்தக அமைச்சின் மாத வாடகை 65 இலட்சம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால நியமக் கணக்கு மீதான விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 24 பேரும் விலையுயர்ந்த வீடுகளுக்குச் செல்லாமல் மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் போன்றவற்றைச் சேமித்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin