இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கும் நுகர்வதற்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறும் பட்சத்தில் 8 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் தற்போது ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த தடைக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.