களுத்துறை பகுதியில் துறவரத்துக்கு செல்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி குறித்த செய்தி ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சிறுமி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 14 வயதும் 06 மாத வயதுடைய இந்த சிறுமி பேருவளை, வளதாறை,... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை கடன் ஜூன் மாதம் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று சனிக்கிழமை (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கருத்துரைத்த இராஜாங்க... Read more »
அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு “தொற்றுநோய்” என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். சிட்னி மற்றும் பிற முக்கிய அவுஸ்திரேலிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணிகளில் பாலின வன்முறைக்கு கடுமையான சட்டங்களை வலியுறுத்திதுடன், தொடர்ந்து பாரிய போராட்டங்கள் சிட்னியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.... Read more »
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித எச்சங்களும் சீருடை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உள்நாட்டுப் போரின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினரால் கடந்த 25ஆம் திகதி இந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட... Read more »
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாக உள்ளது. இந்தக் கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி செல்கிறது. அங்கு மறுசீரமைப்புப் பணிகளை முடித்துக் கொண்டு... Read more »
பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றுடன் அமெரிக்க ஆய்வு கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதை அனுமதிக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிக்கப்போவதில்லை என்ற அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானத்தில் நிலையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடல் எல்லையை பயன்படுத்தாது, எரிபொருள், நீர் சுத்திகரிப்பு, உணவு... Read more »
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு ஊடக துறைக்காக தம் இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலியினை செலுத்தினர். ஊடகவியலாளரான தராக்கி... Read more »
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தனது சேவையை நீடிக்குமாறு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருந்தாலும், அவர் கோரிய சேவை நீடிப்பு இதுவரை கிடைக்கவில்லை என கத்தோலிக்க திருச்சபை வட்டாரத்தில் அறிய முடிகிறது. உயிர்த்த... Read more »
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது. எதிரணி அரசியல் நடத்துகின்றோம் எனக் கூறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாலும், அக்கட்சியில் பதவியை ஏற்றதாலும் அவரை... Read more »
டி20 மகளிர் உலகக் கிண்ண தகுதி காண் சுற்றுப் போட்டியில் இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (27) அபுதாபியில் நடைபெறவுள்ளது. இலங்கை அணிக்கு சாமரி அதபத்துவும், ஸ்கொட்லாந்து அணிக்கு கேத்ரின் பர்சியும் தலைமை தாங்குகின்றனர். A குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்கொட்லாந்து... Read more »