அமெரிக்க ஆய்வு கப்பல் இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுப்பு

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றுடன் அமெரிக்க ஆய்வு கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதை அனுமதிக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிக்கப்போவதில்லை என்ற அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானத்தில் நிலையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடல் எல்லையை பயன்படுத்தாது, எரிபொருள், நீர் சுத்திகரிப்பு, உணவு மற்றும் ஏனையய வசதிகளை பெறுவதற்காக அமெரிக்க ஆய்வுக் கப்பல் இலங்கைத் தீவுக்குள் பிரவேசிக்க அனுமதி கோரியது.

எவ்வாறாயினும் சர்வதேச கடல் எல்லைக்கு சென்று அதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த அமெரிக்க கப்பல் சென்னை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி கோரிய போதிலும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிரல் சீன கப்பல்கள் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கடுமையாக எழுந்தன.

சீன ஆய்வு கப்பலான Xiang Yang Hong 3 கடந்த நவம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தரவிருந்த நிலையில் அதன் வருகைக்கான கோரிக்கை நிராகரிக்கபட்டது.

மேலும் வெளிநாடுகளின் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருக்க இலங்கை அரசாங்கம் ஒருவருடத்திற்கு அனுமதியை வழங்காதிருக்கவும் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin