தரமற்ற மருந்து கொள்வனவு: 124 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வி

வருடமொன்றில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த வருடமாக கடந்த வருடம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 124 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. தர சோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், 55... Read more »

இன்றைய ராசிபலன்கள் 04.01.2024

மேஷம் பேச்சு திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வங்கி கடன்கள் கிடைக்கும். ரிஷபம் பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும்... Read more »
Ad Widget

விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கும் இங்கிலாந்து!

சில அரபு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் விசா இல்லாமல் நுழைய (Visa Free Entry) இங்கிலாந்து அனுமதி வழங்கவுள்ளது. அனைத்து வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள் மற்றும் Jordonஇல் வசிப்பவர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் இந்த வசதி அமல்படுத்தவுள்ளது.... Read more »

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவி விலகல்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் கிளாடின் கே பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்தில் யூத எதிர்ப்பு நடைமுறைகள் குறித்து அவர் கூறிய கருத்துக்களால் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை எதிர்கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் 06 மாதங்கள் அந்தப் பதவியில்... Read more »

வரி இலக்கத்தை எவ்வாறு பெற்றுள்கொள்ள முடியும்?

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஜனவரி 31ஆம் திகதிக்குள் வரி இலக்கத்தை (TIN) அல்லது வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெற வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. அதை எப்படி எளிதாகப் பெறுவது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற கேள்விகள் பலருக்கும் இருக்கின்றது.... Read more »

உயிரை பலியெடுக்கும் மதப் பிரச்சாரம் ஏழு பேர் உயிரிழப்பு: விசாரணையில் பொலிஸார்

மஹரகம மற்றும் கடவத்தை பிரதேசங்களில் விஷம் அருந்தி இளைஞனும், யுவதியும் உயிரிழந்துள்ளதுடன், குறித்த மரணங்கள் தற்கொலைகளாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மாலம்பே, பிட்டுகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தாயொருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் இந்த மரணங்களுடன்... Read more »

ஈரானில் நடந்த குண்டு வெடிப்பு : 103 பேர் உயிரிழப்பு, 141 பேர் படுகாயம்

ஈரான் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்ட நான்கு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இரண்டு குண்டுவெடிப்புகளில் பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. அவரது கல்லறைக்கு அருகில் சென்று கொண்டிருந்தவர்களை குறிவைத்து இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »

திருமலை எண்ணெய் குதங்கள் தனியார் நிறுவனத்துக்கு

திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் குதங்களில் 61 எண்ணெய் குதங்களை திருகோணமலை பெற்றோலிய முனைய தனியார் நிறுவனத்துக்கு 50 வருடகாலத்திற்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2022.01.03ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு குறித்த எண்ணெய் குதங்களை வழங்க கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்... Read more »

இந்தியாவை துவசம் செய்தது தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 153 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதில் இந்திய அணியின் இறுதி ஆறு விக்கெட்டுகளும் வெறும் 11 பந்துகளில் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கேப்டவுனில் இடம்பெறும் இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நாணய... Read more »

‘2024’ சவால்மிக்க ஆண்டு: அனைவரும் தியாகம் செய்ய வேண்டியுள்ளது

2023ஆம் ஆண்டை போன்று 2024ஆம் ஆண்டில் பொருளாதார சவால்கள் தொடரும். இந்த சவால்கள் 2027ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் தலைமையில் 2023 இல் இலங்கையின் பொருளாதாரம் முக்கியமான திருப்புமுனையை அடைந்துள்ளதாகவும்... Read more »