இந்தியாவை துவசம் செய்தது தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 153 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இதில் இந்திய அணியின் இறுதி ஆறு விக்கெட்டுகளும் வெறும் 11 பந்துகளில் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கேப்டவுனில் இடம்பெறும் இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்தது.

அந்த அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்து முதல் இன்னிங்சில் 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிந்தது.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் Kyle Verreynne அதிகப்பட்சமாக 15 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். டேவிட் பெடிங்காம் 12 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்திய அணிக்கு எதிராக ஒரு அணி எடுத்த மிக குறைந்த ஓட்டங்கள் இதுவாகும். தென்னாப்பிரிக்காவும் தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெற்றுக்கொண்ட குறைந்த ஓட்டங்கள் இதுவாகும்.

இந்திய அணி சார்பில் மொஹமட் சிராஜ் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் துடுப்படுத்தாடியது. ஆரம்பம் முதல் மிகவும் நிதானமாக துடுப்பெடுத்தாடியது. ஒரு கட்டத்தில் 153 ஓட்டங்களுக்கு இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.

எனினும், கடைசியாக வீசப்பட்ட 11 பந்துகளில் மீதமுள்ள ஆறு விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டன. இதில் ஆறு பேரும் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் பெவிலியன் திரும்பினர்.

இந்திய அணி சார்பில் விராட் கோலி 46 ஓட்டங்களையும், சுப்மன் கில் 36 ஓட்டங்களையும், ரோகித் ஷர்மா 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, நாண்ட்ரே பர்கர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் தென்னாப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 37 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin