தரமற்ற மருந்து கொள்வனவு: 124 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வி

வருடமொன்றில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த வருடமாக கடந்த வருடம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 124 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தர சோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், 55 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், 40 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஏனைய மருந்துகள் சீனா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில் சில மீள பெறப்பட்டுள்ளதுடன், சில மருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை மிதமாக 600 மருந்துகள் தரப்பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin