தங்க விலை மேலும் அதிகரிப்பு

இன்று (20) தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 188,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 172,800 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு பவுன் 164,950 ரூபாவாகவும்... Read more »

பழுதடைந்த கோழி இறைச்சிகள் குறித்து விசாரணை – K.F.C நிர்வாகம்

ராஜகிரியவில் உள்ள கே.எப்.சி(KFC) விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் பழுதடைந்த கோழி இறைச்சிகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என கே.எப்.சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. குறித்த சம்பவத்தால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. தயாரிப்பு மற்றும் சேவை தரம்... Read more »
Ad Widget

1500 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

2022 ம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட 1500-இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்(GMOA) தெரிவித்துள்ளது. மேலும் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் எதிர்பார்ப்பில் காத்திருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்... Read more »

மட்டக்களப்பின் இ.போ.ச பஸ் சேவை முற்றாக பாதிப்பு

இலங்கை போக்குவரத்துச்சபை பஸ் சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் உள்ள பல்வேறு இலங்கை போக்குவரத்துச்சபை டிப்போக்களில் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்படுகின்றது. மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் நேற்று முன்தினம் மாலை இலங்கை போக்குவரத்துசபையின் மட்டக்களப்பு டிப்போவின்... Read more »

டிச.29 நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் நிறுத்தப்பட வேண்டும்

2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பான தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது டிசம்பர் 29 நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்... Read more »

கூரியர் சேவை மூலம் போதைப்பொருள் விற்பனை: மருத்துவ பீட மாணவன் கைது

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் கூரியர் சேவை மூலம் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த மருத்துவ பீட மாணவர் நேற்று... Read more »

ஆபாச காணொளிகளை பகிர்வோருக்கு எச்சரிக்கை

சிறுவர்களின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திலோ அல்லது சமூக ஊடகங்களினூடாகவோ விநியோகம் செய்பவர்களை அடையாளம் காணக்கூடிய சர்வதேச தரவு அமைப்பில் இலங்கை பொலிஸ் இணைந்துள்ளது. இந்த தரவு அமைப்பு inter ational center for missing and exploited children என அழைக்கப்படுவதாக... Read more »

தற்காலிகமாக மூடப்பட்டது புறா தீவு

வடகிழக்கு பருவப்பெயர்ச்சியுடன் கடலில் சூறாவளி போன்ற தொடர் இன்னல்களால் திருகோணமலை நிலாவெளி தேசிய பூங்காவின் புறா தீவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. படகு மூலம் தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த... Read more »

மூடப்படும் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்குப் பின்னர் மூடப்படும் என பெற்றோலிய பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 238 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்... Read more »

100ஐ தாண்டியது டெங்கு உயிரிழப்பு

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2023 நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சிரேஸ்ட்ட வைத்திய அதிகாரி சுதத் சமரவீர தெரிவித்தார். இன்றைய தினம் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்... Read more »