சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்குப் பின்னர் மூடப்படும் என பெற்றோலிய பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 238 சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தற்போது பெறும் 2.75 வீத தரகுப் பணத்தில் 35 வீதத்தினை புதிய மாதாந்த விநியோகஸ்தர் கட்டணமாக வசூலிப்பதற்கு கூட்டுத்தாபனம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
குறித்த தொகையினை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னதாக செலுத்தாத நிலையில், அன்று முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு மாட்டாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை 12 மாத தவணையாக செலுத்துவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாதாந்த கட்டணம் மற்றும் நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறும் நிலையில், முன்னறிவிப்பு இன்றி எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவோம் என பெற்றோலிய பிரிப்பாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.