கோடீஷ்வரர்களாக மாறிய பொலிஸ் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள்..!
பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றும் பல அதிகாரிகள் கோடீஷ்வரர்களாக இருப்பதாக கிடைப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் 400 அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பணம் தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 05 பிரதி ஆய்வாளர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு எதிராக ஏற்கனவே விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன தலைமையில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் மேற்பார்வையின் கீழ், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் 20 அதிகாரிகளின் சொத்து விபரங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.சிலர் இந்த பிரிவில் 20-25 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், அவர்களில் பலர் சரியான சேவையை செய்வதில்லை எனவும் தெரியவந்துள்ளது.
நீண்ட காலமாக ஒரே பிரிவில் பணிபுரியும் சில அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகவும், விசாரணைகள் தொடர்பான அனைத்து தகவல்களும் அவர்கள் மூலம் கடத்தல்காரர்களுக்கு அனுப்பப்படுவதாகவும் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

