சிறுவர்களின் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திலோ அல்லது சமூக ஊடகங்களினூடாகவோ விநியோகம் செய்பவர்களை அடையாளம் காணக்கூடிய சர்வதேச தரவு அமைப்பில் இலங்கை பொலிஸ் இணைந்துள்ளது.
இந்த தரவு அமைப்பு inter ational center for missing and exploited children என அழைக்கப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த தரவு அமைப்புடன் இலங்கை பொலிஸாரால் தொடர்பு கொள்ள முடிந்ததாகவும் அதன் மூலம் இணையத்தில் ஆபாசமான வீடியோக்களை அடிக்கடி பார்க்கும் நபர்களைப் பற்றிய தகவல்களைப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தள சேவை வழங்குநர்கள் இந்த சர்வதேச தரவு அமைப்புடன் இணைத்து தகவல்களை பரிமாறிக்கொள்வதால் அத்தகையவர்களை மிக எளிதாக அடையாளம் காண முடியும்.