ஆலயடி வேம்பு பிரதேசசபை உப தவிசாளரின் முன்மாதிரியான செயல்..!
அனுமதியற்ற மீன்பிடியாளர்களின் வருகையினால் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு நன்னீர் மீனவர்கள் பாதிப்பு.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்டுள்ள தில்லை ஆறு அதனோடு இணைந்த களப்பு பகுதியும் லேதிக நீரை வெளியேற்றும் சின்னமுகத்துவாரத்தையும் நம்பி ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்டு வாழும் 08 சங்கங்களை சேர்ந்த 200 குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை அனுமதியற்ற மீன்பிடியாளர்களின் வருகையினால் தமது வாழ்வாதாரத்தை இழந்து வருக்கின்றனர்.
இறால் பெருக்கத்துக்கான காலம் என்பதால் அதிக இறால்களும் மீன்களும் பிடிபடும் 04 மாதங்கள் இவ் நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்திலும் பெரும் தாக்கத்தை செலுத்துகின்றது.
அயல் ஊர்களில் இருந்து பெருமளவிலானவர்கள் இங்கு வந்து இறால்களை பிடித்து வியாபாரம் நடாத்துவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இம் மீனவர்கள் தமது அதிர்ப்தியை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் அனுமதியற்ற சுருக்குவலை தங்கூசி வலைகொண்டும் களப்பிலுள்ள மீன்களை பிடிப்பதால் மீன்களின் உற்பத்தி குறைவதோடு வளங்களும் அழிகின்றது.
இதேவேளை நேற்றையதினம்(27.01.2026) மீனவர்களின் முறைப்பாட்டை அடுத்து சம்மந்தப்பட்ட சின்னமுகத்துவாரப்பகுதிக்கு ஆலையடிவேம்பு பிரதேசசபை பிரதித்தவிசாளர் நேரடி களவிஜயம் செய்ததுடன் மீனவர்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார். பிரதேசத்துக்கு பொறுப்பான திணைக்கள அதிகாரியினை தொடர்பு கொண்டு பேசியதுடன் ஆலையடிவேம்பு பிரதேச மீனவர்களின் பிரச்சனைக்கு நேரடி களவிஜயம் செய்து மீனவர்களின் பிரச்சனைக்கு உரிய தீர்வை பெற்றுத்தரும்படி கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

