07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை!

2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 07 ஈரானிய பிரஜைகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி... Read more »

ஜனாதிபதி அநுரவின் கீழ் 94 நிறுவனங்கள் உள்ளன – ஹரிணிக்கு 26, நலிந்தவுக்கு 41 நிறுவனங்கள்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கீழ் உள்ள 03 அமைச்சுக்கள் தொடர்பான விடயங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், தொண்ணூற்று நான்கு நிறுவனங்களின் பொறுப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த தொண்ணூற்று நான்கு நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் கீழும் பாதுகாப்பு... Read more »
Ad Widget

தற்காலிக இலக்கத் தகடு பாவனை டிசம்பர் 15ம் திகதியுடன் நிறைவு

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் இலக்கத் தகடுகளை பெறுவதற்கு நீங்கள் பணம் செலுத்தி இன்னும் அதைப் பெறவில்லையென்றால், 2024 டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன் உங்கள் இலக்கத்... Read more »

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண், பால்மாவுடன் கைது!

5,000 ரூபா பெறுமதியான பால் மா பொதிகளைத் திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குருதுவத்தை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபருடன் திருடப்பட்ட இரண்டு பால் மா பொதிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குருதுவத்தை வோர்ட் பிளேஸில் உள்ள பல்பொருள் அங்காடியில் இரண்டு குழந்தைப் பால்... Read more »

அமைச்சுகளுக்கு சொந்தமான 254 அதி சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட தீர்மானம்!

தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று இந்த கார்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.... Read more »

தாளமுக்கத்தின் தாக்கம் படிப்படியாக குறையும்

இது சூறாவழியாக வலுவடையும் சாத்தியம் குறைவாக இருப்பதாகவே தற்போது தெரிவிக்கப்படுகின்றது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்படுகின்ற ஆழ்ந்த தாழமுக்கமானது தற்போது திருகோணமலையிலிருந்து வடகிழக்காக 240km தூரத்திலும், காங்கேசன்துறையில் இருந்து கிழக்காக 290km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது. இது வடக்கு திசையில்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் ரத்து?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் மற்றும் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்வது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான 150 சொகுசு வாகனங்களை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள்... Read more »

மின்சாரம் தாக்கியதில் இருவர் பலி

முந்தலம் – 412 ஏக்கர் பகுதியில் நேற்று (28) இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார், இந்த விபத்தில் கணவன், மனைவி என தம்பதி உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் 55 மற்றும் 52 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த இருவரும் தங்கள் குடியிருப்புக்கு அருகில் வணிக... Read more »

மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயற்சி சந்தேகநபர்களுக்கு பிணை மறுப்பு

2008ஆம் ஆண்டு பொரலஸ்கமுவவில் அப்போதைய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயற்சித்த இரண்டு விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவித்த நேற்று (28) நிராகரித்துள்ளார். சந்தேக நபர்களான “கோஸ்தர்” அல்லது “மோரிஸ்” என அழைக்கப்படும் செல்வராசா... Read more »

அவசரகால உதவிக்கு அழைக்க வேண்டிய எண்,107

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமைகள் தொடர்பில் அறிக்கையிடுவதற்கும் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் 24 மணித்தியாலங்களையும் உள்ளடக்கிய விசேட நடவடிக்கை அறையொன்று பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த சிறப்பு பிரிவின் பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.... Read more »