இலங்கை விமானப்படையின் Bell 212 ஹெலிகாப்டர் மதுரோயா விலானத்தில் விபத்துக்குள்ளானதையடுத்து, இன்று (மே 10) “Sun Bun” கப்பல் மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. விபத்தில் 12 பேர் இருந்தபோது, 6 வீரர்கள் (2 விமானப்படை, 4 இராணுவ சிறப்பு படை) உயிரிழந்தது மிகுந்த வருத்தம்... Read more »
கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்றையதினம்(10.05.2025) ஏற்பட்டுள்ளது. இதன்போது, 6 தீயணைப்பு வாகனங்கள், கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டிடமொன்றில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. Read more »
நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 07 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி... Read more »
பாலியல் இலஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அரச அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை இன்று(09) விதித்துள்ளது. 7 வயது பிள்ளையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்க நிதி உதவி கோரிய 30 வயது தாயிடம் குறித்த அதிகாரி... Read more »
நீண்ட வார விடுமுறை மற்றும் அரச வெசாக் நிகழ்வினை முன்னிட்டு இன்று (09) முதல் பல சிறப்பு ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையிலும், கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கும் இடையிலும் இந்த சிறப்பு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி,... Read more »
கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரதமர்... Read more »
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 6 வீரர்கள் உயிரிழந்தனர். ஹெலிகொப்டரை அவசர தரையிறக்கம் செய்ய முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.... Read more »
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் மே மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நிகழ்நிலை... Read more »
கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவியின் மரணத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், குறித்த விடயத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தொகுதி அமைப்பாளர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்படுவதாகவும் அவரை பாதுகாப்பதற்கு அரசாங்கம்... Read more »
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சிக்காக விலங்குகள் வெட்டப்படும் இடங்கள் மூடப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இறைச்சிக் கடைகள், பந்தயம் பிடிக்கும் இடங்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் களியாட்ட விடுதிகள் ஆகியவையும் குறித்த... Read more »

