சர்ச்சைக்குரிய ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொட்டாஞ்சேனை மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரதமர் ஹரிணி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டபோதே, முஜிபுர் ரஹ்மான், இந்த விடயத்தில் நீதியான விசாரணைகள் நடப்பதாக தெரியவில்லை என்று சாடினார்.

நீதியான விசாரணைகள் நடக்குமாயின் இந்த விடயத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஆசிரியரின் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா என்றும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இடமாற்றம் மட்டும் போதுமானதல்ல எனவும் கூறினார்.

Recommended For You

About the Author: admin